அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சிறப்புப் பயிலகங்களில் உள்ள விரிவுரையாளர் காலிப்பணியிட அறிவிப்பு - Direct Recruitment of Lecturers (Engineering / Non-Engineering) in Government Polytechnic Colleges for the year 2017-18 - Online Application

Praveenkumar
0
அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சிறப்புப் பயிலகங்களில் உள்ள விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவிற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை எண்.14/2019, நாள் 27.11.2019 அன்று வெளியிடப்பட்டது. மேற்காணும் பணியிடங்களுக்கான இணையவழியாக விண்ணப்பிக்க இறுதி நாள் 12.02.2020 என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்விற்கான உத்தேச தேதி மே முதல் வாரத்தில் நடைபெறும் என்ற
விவரம் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது உள்ள நடைமுறைகளின்படி இணையவழி வாயிலாக விண்ணப்பிக்கும் போதே சான்றிதழ்கள் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டு விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களின் உண்மை நகல்களை பதிவேற்றம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே அறிவிக்கையினை முழுமையாக படித்து உரிய விதிமுறைகளை தெரிந்து கொண்டு தேவையான அனைத்து சான்றிதழ்களையும் தவறாமல் பதிவேற்றம் செய்திடவும் பணிநாடுநர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வு அட்டவணை இறுதி நிலையில் உள்ளதால் எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கபடமாட்டாது. எனவே உரிய காலத்திற்குள் விண்ணப்பங்களை உரிய விண்ணப்ப கட்டணங்களுடன் செலுத்தி விண்ணப்பித்திட பணிநாடுநர்கள் இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Direct Recruitment of Lecturers (Engineering / Non-Engineering) in Government Polytechnic Colleges for the year 2017-18
********

Post a Comment

0Comments

Post a Comment (0)