மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், சென்னை மாவட்டம், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னை மாவட்டத்தில் செயல்படும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள், சென்னை மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் சென்னை மண்டலத்தில் உள்ள இதர மத்தியக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தொடக்கக் கூட்டுறவுச் சங்கங்களில் (பணியாளர்கள் கூட்டுறவு பண்டகசாலைகள் மற்றும் மாணவர்கள் கூட்டுறவுப் பண்டகசாலைகள் நீங்கலாக) காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களை நேரடிய நியமனம் மூலம் நிரப்புவதற்கு இந்தியக் குடியுரிமையுடைய கீழ்காணும் தகுதிபெற்ற ஆண்/பெண் மூன்றாம் பாலின விண்ணப்பதாரர்களிடமிருந்து 13/01/2020 முதல் 12/02/2020 வரை விண்ணப்பங்கள் (விளம்பர எண்.1/2020 நாள் 10/01/2020) வரவேற்கப்படுகின்றன.
வ.
எண்
|
கூட்டுறவு நிறுவனத்தின் பெயர்
|
பதவி விவரம்
|
காலியிடங்கள் எண்ணிக்கை
|
1
|
தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி
|
அலுவலக உதவியாளர்
|
72
|
ஓட்டுநர்
|
5
|
||
2
|
தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம்
|
அலுவலக உதவியாளர்
|
10
|
ஓட்டுநர்
|
4
|
||
3
|
தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம்
|
அலுவலக உதவியாளர்
|
1
|
ஓட்டுநர்
|
1
|
||
4
|
சென்னை மத்தியக் கூட்டுறவு வங்கி
|
அலுவலக உதவியாளர்
|
58
|
ஓட்டுநர்
|
8
|
||
5
|
சென்னை மத்தியக் கூட்டுறவு அச்சகம்
|
அலுவலக உதவியாளர்
|
2
|
6
|
வட சென்னை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை
|
அலுவலக உதவியாளர்
|
1
|
ஓட்டுநர்
|
1
|
||
7
|
நகர கூட்டுறவு வங்கிகள்
|
அலுவலக உதவியாளர்
|
5
|
8
|
பணியாளர் கூட்டுறவுக் கடன் சங்கங்கள்
|
அலுவலக உதவியாளர்
|
5
|
|
|
மொத்தம்
|
173
|
குறிப்பு.-
- மேலே குறிப்பிட்டுள்ள காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை தோரயமானது.
- நியமனத்தின்போது பெண் விண்ணப்பதாரர்கள் போதுமான அளவு இல்லாத தேர்வில் பெண்களுக்கான ஒதுக்கீடு எண்ணிக்கை, தகுதி வாய்ந்த அதே வகுப்பைச் சாந்த ஆன் விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும்.
- ஆதரவற்ற விதவைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் இந்த நியமனத்தின்போதும் பின்பற்றப்படும்.
- மேற்படி சம்பளம் விகிதம் இதர படிகள் மேற்குறிப்பிட்ட கூட்டுறவு நிறுவன பணியாளர் பணிநிலை குறித்த சிறப்புத் துணைவிதிகளுக்குட்பட்டு அமையும்.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்படும் சம்பத்தப்பட்ட கூட்டுறவு நிறுவனத் துணைவிதிகளுக்குட்பட்டு பணிபுரிய வேண்டும்.
- தலைமை கூட்டுறவிச் சங்கங்கள், சென்னை மத்தியக் கூட்டுறவு வங்கி, இதர மத்திய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தொடக்க கூட்டுறவுச் சங்கங்கள்ஆகியவற்றில் உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு வகையான சங்கத்தில் உள்ள ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியே விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதிகள்
1). விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
2). விண்ணப்பதாரர்கள் 01/01/2020 அன்று கீழ்கண்ட வயதினை பூர்த்தி செய்தவராக இருக்கக்கூடாது.
அ). ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம் மற்றும் இவ்வகுப்புகளைச் சார்ந்த முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் – வயது வரம்பு இல்லை
ஆ). அனைத்து இனத்தைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் – வயது வரம்பு இல்லை
இ). பிற வகுப்பினர் – 30 வயதுக்கு மிகாமல்
ஈ). பிற வகுப்பினைச் சார்ந்த முன்னாள் இராணுவத்தினர் – 48 வயதுக்கு மிகாமல்
உ). பிற வகுப்பினைச் சாந்த மாற்றுத் திறனாளிகள் – 40 வயதுக்கு மிகாமல்
கல்வித் தகுதி
1). அலுவலக உதவியாளர்
அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பள்ளி இறுதி வகுப்பு சேர தகுதி உடையவர்.
2). ஓட்டுநர்
- அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பள்ளி இறுதி வகுப்பு சேர தகுதி உடையவர்.
- மோட்டார் வாகனச் சட்டம் 1939-ன் படி வழங்கப்பட்ட இலகுரக/கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
- இரண்டு ஆண்டுகள் குறையாது இலகுரக வாகனம் ஓட்டிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பம் விநியோகித்தல்
மேற்படி பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவத்தை
கூடுதல் பதிவாளர்,
சென்னை மண்டலம் அலுவலகம்,
எண்.91, தூய மேரி சாலை,
அபிராமபுரம், சென்னை – 600 018
என்ற முகவரியில் 13/01/2020 முதல் 12/02/2020 வரை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பக்கட்டணம்
விண்ணப்பக்கட்டணம் ரூ.150/- ஆகும்.
ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், ஆதரவற்ற விதவைகள் மற்றும் அனைத்து வகுப்பினைச் சாந்த மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
1). விண்ணப்பப் படிவங்கள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
2). விண்ணப்பப் படிவத்துடன் விண்ணப்பதாரருக்கு பொருந்தும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள்/ நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.
அ). விண்ணப்பதாரரின் புகைப்படம்
ஆ). விண்ணப்பதாரரின் சாதிக் சான்றிதழ்
இ). மாற்றுத் திறனாளிகள் சான்றிதழ்
ஈ). ஆதரவற்ற விதவைச் சான்றிதழ்
உ). முன்னாள் இராணுவத்தினர் சான்றிதழ்
ஊ). தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்
எ). கல்வித் தகுதிச் சான்றிதழ்.
ஏ). ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் கனரக / இலகுரக வாகனங்களை ஓட்டுவதற்கான சான்றிதழ்.
*********