கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர் கட்டுப்பாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாகக் கொண்டு செயல்படும் கீழ்காணும் தலைமைக் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக இந்திய குடியுரிமையுடைய கீழ்காணும் தகுதிபெற்ற ஆண், பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் http://www.tncoopsrb.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் மட்டுமே 01.02.2020 அன்று மாலை 5.45 வரை வரவேற்கப்படுகின்றன.
அ. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது.
ஆ. இத்தெரிவுக்கு நடைமுறையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வுக்குப் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு மற்றும் இனச் சுழற்சி முறை ஒட்டு மொத்த நியமனத்திற்கும் பின்பற்றப்படும்.
இ. மேற்குறிப்பிட்ட காலிப்பணியிடங்களில் பெண்கள், ஆதரவற்ற விதவைகள், முன்னாள் இராணுவத்தினர், தமிழ் வழியில் பயின்றோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு விதிகள் நடைமுறையில் உள்ள அரசு ஆணைகளின்படி பின்பற்றப்படும்.
ஈ. மேற்படி சம்பள விகிதம் மற்றும் இதரப் படிகள் மேற்குறிப்பிட்ட கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர் பணிநிலை குறித்த சிறப்புத் துணைவிதிகளுக்குட்பட்டு அமையும்.
உ. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்படும் சம்பந்தப்பட்ட கூட்டுறவுச் சங்கத்தின் துணைவிதிகளுக்குட்பட்டு பணியாற்ற வேண்டும்.
ஊ. தேர்வில் கலந்துகொள்ளும்போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்த விவரங்கள் தேர்வு நுழைவுச் சீட்டில் தெரிவிக்கப்படும்.

ஆ. கல்வித் தகுதி
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) (10 + 2 + 3 முறையில்)
மற்றும்
கூட்டுறவுப் பயிற்சி
கூடுதல் தகவல்களுக்கு கீழ்காணும் விளம்பர அறிவிப்பைக் காணவும்.
********